19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில் இன்று இரவு அசாம் மாநிலம் கவுகாத்தியில் 7.30 மணிக்கு நடக்கும் 13-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் அணி தனது முதல் இரு ஆட்டங்களிலும் (சென்னை, குஜராத்) வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் உள்ளது. 5 முறை சாம்பியனான மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக 221 ரன் இலக்கை சாதாரணமாக விரட்டிப்பிடித்து சாதனை படைத்தது. ஆனால் டெல்லிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் 162 ரன் மட்டுமே எடுத்த மும்பை அணி, தோல்வி அடைந்தது.
இரு அணிகளின் உத்தேச பட்டியல் :
மும்பை: ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா (கேப் டன்), ரூதர்போர்டு, மிட்செல் சான்ட்னெர், நமன் திர், பும்ரா, ஷர்துல் தாக்குர், டிரென்ட் பவுல்ட் அல்லது கார் பின் பாஷ் அல்லது தீபக் சாஹர், மயங்க் மார்கண்டே.
ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜூரெல், ரியான் பராக் (கேப்டன்), ஹெட்மயர், டோன வன் பெரேரா, ரவீந்திர ஜடேஜா, ஜோப்ரா ஆர்ச்சர், நன்ரே பர்கர், துஷர் தேஷ்பாண்டே, சந்தீப் ஷர்மா, ரவி பிஷ்னோய்.







