தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. திரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி திரையுலக வாழ்க்கை குறித்தும் அவ்வப்போது பரபரப்பு கிளம்பி வருகிறது. சமீபத்தில் தவெக தலைவர் விஜய்யுடன் அவர் திருமண நிகழ்வுக்கு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திரிஷா புதிய படங்களுக்கு கமிட் ஆகாமல் இருப்பதாகவும், இதனால் திரையுலகில் இருந்து விலக உள்ளாரா? என்ற கேள்வியும் சினிமா வட்டாரத்தில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக மாறியுள்ளது. இதனிடையே நடிகரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் சேனலில், திரிஷா இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில், “நடிகை திரிஷா பற்றி வெளியாகியிருக்கும் செய்தி உண்மைதான். சமீபத்தில் ஒரு சில தயாரிப்பாளர்கள் கூட எனக்கு அதை உறுதிப்படுத்தினார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதால் திரைத்துறையை விட்டு விலகுவதாக வெளியான தகவலுக்கு நடிகை திரிஷா மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகை திரிஷா வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், “நான் சினிமாவை விட்டு விலகிவிட்டேன். ஒரு பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டேன். ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளை வளர்த்து வருகிறேன். அவர்களுக்கு நேற்றுதான் இரண்டு வயதானது. இன்னும் வேறு ஏதாவது நான் சேர்க்க வேண்டுமா? அல்லது இன்றைய கற்பனை கதைக்கான கோட்டாவை பூர்த்தி செய்துவிட்டோமா?” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.







