#IPL2026 | மும்பை – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்!

மும்பை நகரில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை – பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் 24-வது லீக் ஆட்டம் மும்பை நகரில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

இரு அணிகளும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், தலா 17 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. இதனால், இன்றைய ஆட்டம் யாருக்கு மேலாதிக்கம் கிடைக்கும் என்ற ஆவலை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த மோதலில் பரபரப்புக்கு எந்த குறையும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை நகரில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.