19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன.
இதில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 35-வது லீக் ஆட்டத்தில் டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதுகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
அதன்படி, பஞ்சாப் அணி முதலில் பந்து வீச உள்ளது. நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக பஞ்சாப் திகழ்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 17 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.







