#IPL2026 : பெங்களூருவிற்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சு தேர்வு…!

பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டாஸ் தற்போது சுண்டப்பட்டடுள்ளது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

அணி விவரம்

டெல்லி : கே.எல்.ராகுல் (WK), பாத்தும் நிசாங்கா, சமீர் ரிஸ்வி, அக்சர் படேல் (C), டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஆக்கிப் நபி, லுங்கி என்கிடி, குல்தீப் யாதவ், டி.நடராஜன், முகேஷ் குமார்.

பெங்களூரு : விராட் கோலி, பில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (C), ஜிதேஷ் சர்மா (WK), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், சுயாஷ் ஷர்மா, ஜோஷ் ஹேசில்வுட்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.