தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;
நேற்று மகளிர் இட ஒதுக்கீடு சட்ட மசோதா முறியடிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தருவதாக கூறுகிறார்கள். ஆனால் உண்மையை குழி தோண்டி புதைக்க பார்க்கிறார்கள். மாநிலங்களுக்காக தொகுதிகளை மாற்றியமைக்க பார்க்கிறார்கள்.
தமிழ்நாடு மற்றும் வடகிழக்கு மாநிலங்களை ஒடுக்க பார்கிறார்கள். எல்லா மாநிலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். பாஜக தமிழ்நாட்டின் அடையாளங்களையும் சித்தாத்தங்களையும் அழிக்க பார்க்கிறது. தமிழ் சாதாரண மொழி இல்லை. தமிழ் தேசத்தின் ஆத்மா.
அதிமுகவிற்கு சொல்கிறேன். உங்கள் கட்சி இப்போது என்ன நிலையில் உள்ளது. அதிமுக ,பாஜகவை முழுவதுமாக உள்வாங்கி இருக்கிறது.
அதிமுகவை பாஜக மிரட்டி கையகப்படுத்தி உள்ளது. பாஜகவின் கருவியாக அதிமுக உள்ளது. தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும். தமிழ்நாட்டை முகமுடி அணிந்து யாராலும் ஆள முடியாது.
தமிழ்நாட்டில் மீது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் எந்த காலத்திலும் ஆதிக்கம் செலுத்த முடியாது. நேற்று பாஜக கொண்டு வந்த மசோதாவை தடுத்து நிறுத்தி உள்ளேன். நேற்று பாஜக ஜனநாயக முறையில் தோல்வி அடைந்துள்ளது. சமூக நீதிக்கான நாடு, தமிழ்நாடு என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களை குடும்பமாக நேசிக்கிறேன். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-யை தொடர்ந்து நாம் எதிர்த்து கொண்டு இருக்கிறோம். மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கரின் புகழை சீரழிக்க பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவை பிளவு படுத்த பார்க்கிறார்கள்.
பிரதமரால் எதிர்கட்சிகளை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு நாம் வலிமையாக இருக்கிறோம். திமுக காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெற போகிறது.







