ஓடிடி உரிமம் : முதல் பாகத்தின் சாதனையை முறியடித்த ஜெயிலர் 2…?

ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியை பதிவு செய்த படம் ‘ஜெயிலர்’. நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், வினாயகன், வசந்த் ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ரஜினி காந்தின் மாஸ் காட்சிகளும் நெல்சனின் டார்க் காமெடியும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தந்தன. வில்லன் வினாயகனின் நடிப்பும், மோகன் லால், சிவராஜ் குமார் மற்றும் ஜாக்கி செராஃப் ஆகியோரின் கேமியோவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

பாக்ஸ் ஆபீசில் சக்கை போடு போட்ட இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமம் தொடர்பான அதிகாரபூர்வமற்ற தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அத்தகவலின் படி ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ. 160 கோடிக்கு வாங்கியுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக ஜெயிலர் பட முதல் பாகத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் நிறுவனம் ரூ. 100 கோடிக்கு வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இது தொடர்பான அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.