“பேராசிரியர் கலையரசன் கைது விவகாரம் – அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை” – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

பேராசியிரியர் கலைரசனை அகைது செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை வளர்ச்சி மையத்தின் பேராசிரியரான கலையரசனை கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாலை நேரத்தி சீருடை இல்லாத போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்லாவரம் தவெக எம்.எல்.ஏ. காமாட்சி குறித்து அவதூறான கருத்தை பதிவிட்டதற்காக கைது செய்யப்படுவதாக போலீசார் விளக்கம் அளித்தனர். இதனையடுத்து அந்த இன்ஸ்டாகிராம் பக்கம் தனது இல்லை என பேராசிரியர் கலையரசன் விளக்கம் அளித்தார். இந்த சம்பவத்திற்கு திமுக உளிட்ட பல்வேறு எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பேராசியிரியர் கலைரசனை அகைது செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “கேள்விகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது நல்லாட்சியல்ல; கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிர்வாகத்தை உருவாக்குவதுதான் நல்லாட்சி!

விமர்சனங்களை உள்வாங்கித் தமது தவறுகளைத் திருத்திக்கொள்வதுதான் ஜனநாயகத்தின் மாண்பு! விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியது கருத்துகளால்; காவல்துறை நடவடிக்கைகளால் அல்ல!

Fake ID-யின் Comment-ஐக் காரணமாகச் சொல்லி, அதிகாலையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேராசிரியர் கலையரசன் அவர்கள், தமக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி வெளிவந்திருப்பதற்கு எனது வாழ்த்துகள்!

சதியில் ஈடுபட்ட விர்ச்சுவல் விஷமிகளைக் கண்டறிவதோடு, அத்துமீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதும் அவசியம் என்பதை அரசுக்கு நினைவூட்டுகிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.