இந்தியாவுக்கு எதிரான நட்புறவு கால்பந்தாட்டத்தில் பிரேசில் அணி வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் பிரேசில் கால்பந்து அணிகள் இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் மைதானத்தில் நடைபெற்றது. 5 முறை உலக சாம்பியனான பிரேசில் உலகத் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கிறது. இந்தியா 138-வது இடம் வகிக்கிறது. இவ்விரு அணிகளும் சர்வதேசப் போட்டியில் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிலையில், இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக பிரேசில் அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு கொல்கத்தா வந்தடைந்தது. பிரேசில் அணி வீரர்களுக்கு இந்தியாவில் கால்பந்து ரசிகர்கள் அதிகம் உள்ளதால், இப்போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில், இந்தியா – பிரேசில் இடையிலான கால்பந்து போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்கியது. கார்லோ அன்செலோட்டி தலைமையிலான நட்சத்திர பிரேசில் அணி ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. இருப்பினும், இந்திய அணியும் தங்களுக்கு கிடைத்த ஒரு சில வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்தி, பிரேசில் கோல் போஸ்டை நோக்கி முன்னேறியது. இந்த நிலையில், ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் எஸ்டெவாவ் வில்லியன் ஆட்டத்தின் முதல் கோலை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, 42-வது நிமிடத்தில் பெட்ரோ பிரேசில் அணியின் இரண்டாவது கோலை பதிவு செய்தார். இதன்மூலம், ஆட்டத்தின் முதல் பாதியில் பிரேசில் அணி 2-0 என முன்னிலை வகித்தது.

இதனையடுத்து, ஆட்டத்தின் இரண்டாம் பாதி தொடங்கியது. அப்போது, 58-வது நிமிடத்தில் பிரேசிலின் சாமுவேல் லினோ ஒரு கோலும், 95-வது நிமிடத்தில் சாமுவேல் லினோ ஒரு கோலும் அடித்தார். இந்திய அணி இறுதிவரை கோல் அடிக்க முடியவில்லை. இதன்மூலம், ஆட்டத்தின் முடிவில் 4-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.