ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல்; மாணவி உயிரிழப்பு

சிதம்பரம் அருகே ஆபாசமாக படம் எடுத்து இளைஞர் மிரட்டியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் கிராமம் நடுப்பாளையம் தெருவை சேர்ந்தவர்…

சிதம்பரம் அருகே ஆபாசமாக படம் எடுத்து இளைஞர் மிரட்டியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் கிராமம் நடுப்பாளையம் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணா. அவரது மகள் அஜினாதேவி அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று மாட்டுக்கொட்டகையில் கையிரால் தூக்கிலிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். மகளை காணமால் தேடி பார்த்த அவரது தாயார், மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்த அண்ணாமலைநகர் போலீசார், மாணவி உடலை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி, குளிக்கும்போது ஒருவர் படம் எடுத்து மிரட்டி வந்ததாகவும்.

இதனால் எனக்கு வாழ பிடிக்கவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக்  கொண்டார் எனவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவி பயன்படுத்திய செல்போன் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதலாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்  கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.