ஸ்ரீமுஷ்ணம் அருகே அதிமுக கிளைச் செயலாளர் அண்ணாதுரையின் மகன் கீர்த்திராஜன் உயிரிழப்பில் மர்மம். கொலையா உயிரிழப்பாஎன போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கங்குப்பம் சுடுகாடு பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் இருபது வயதான இளைஞர் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் காவலக்குடி கிராமத்தைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் அண்ணாதுரையின் மகன் கீர்த்திராஜன் (20) என்பது தெரியவந்தது.
இறப்புக்கான காரணம் தெரியாமல் மர்மம் நீடிக்கும் நிலையில் தந்தை அண்ணாதுரை அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடலை மீட்ட போலீசார், உடல்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் முடிவிற்குப் பிறகு மர்மம் விலகும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கின்றனர். இளைஞர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








