இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 2ம் தேதி ஆளுநர் உரையோடு தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்றது. ஆளுநர் உரையை தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தின் தற்போதைய ஆட்சிக்காலம், வரும் மே மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், நடப்பு ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதனையொட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை 13 ஆம் தேதி காலை 11.15 க்கு கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட்டில், கொரோனா பரவலை தடுக்க ஆன செலவு, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, ஆகியவற்றுக்கு நிதி ஆதாரங்கள், ஒதுக்கீடு, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டிற்கு ஒப்புதலும் வழங்கப்படுகிறது.







