முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க முதல்வர் அறிவிப்பு!

திருப்பூர் உடுமலைப்பேட்டையில் பரப்புரையை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இரண்டு நாள் பயணமாக சென்னை வந்து அதிகாரிங்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக சார்பில் முதலமைச்சர் பழனிசாமி பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். மக்களை நேரில் சந்தித்திக்கும் முதல்வர் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்.

திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், உடுமலைப் பகுதிகளில் இன்று எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார். உடுமலைப்பேட்டையில், விவசாயிகளின் மோட்டார் பம்ப் செட்க்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். இதற்கு முன்பு சட்டப்பேரவையில் விவசாயிகள் பயிர்க் கடனை முதல்வர் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றார் அண்ணாமலை

Jeba Arul Robinson

விதிகளை மீறினால் முழு ஊரடங்கு : தமிழிசை எச்சரிக்கை!

Ezhilarasan

அரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் – திருமாவளவன்

Gayathri Venkatesan

Leave a Reply