முக்கியச் செய்திகள் உலகம் கொரோனா

கொரோனா ஊரடங்குக்கு எதிராக தீவிரமடையும் மக்கள் போராட்டம் – சீன அரசுக்கு கடும் நெருக்கடி

சீனாவில் கொரோனா ஊரடங்குக்கு எதிரான போராட்டம், பல்வேறு முக்கிய நகரங்களில் தீவிரமடைந்துள்ளது. இதனால் சீன அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பரவல் புதிய உச்சத்தை தொட்டு வருவதால் சீன அரசு பொது முடக்கம் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியிருப்பது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

2019ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவத் தொடங்கிய வூஹான் நகரில், பொதுமுடக்கத்துக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி அரசின் ஆணைகளுக்கு கீழ்படிய மறுக்கும் மக்களது போராட்டம், பெரும்பாலான முக்கிய நகரங்களில் காட்டுத் தீயாக பரவியுள்ளது. பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீதிகளில் இறங்கி ஆவேசமாகப் போராடி வருகின்றனர். ஷாங்காய் நகரில் நடைபெற்ற போராட்டம் குறித்து செய்தி சேகரித்த லாரன்ஸ் என்ற செய்தியாளர் ஒருவர் போலீசாரால் தாக்கப்பட்டு கைவிலங்கிடப்பட்ட சம்பவதுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

வூஹான் பகுதியில் உலோகத் தடுப்புகள் மற்றும் கொரோனா பரிசோதனை முகாம்களை போராட்டக்காரர்கள் உடைத்துத் தள்ளி கொரோனா பொதுமுடக்கத்துக்கு எதிராக போராடிய காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன. பல இடங்களில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக வூஹானின் ஒரு பகுதியில், மக்கள் கூட்டம் கூட்டமாக பேரணியாகவும் சென்றனர். இதேபோல செங்குடு பகுதியிலும் பெரிய அளவிலான மக்கள் போராட்டம் நடைபெற்றது. கொரோனா பொதுமுடக்கத்துக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி பரவி வருவது சீன அரசுக்கு கடும் நெருக்கடியை எற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ராவுல் காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்க சிஐஏ சதி !

எல்.ரேணுகாதேவி

இங்கிலாந்து மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா தேதி அறிவிப்பு

EZHILARASAN D

மளிகை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து: அமைச்சர் சேகர்பாபு