ஒரு மாதத்தில் 2 ஆயிரம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும்-புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரியில் 1 மாத காலத்திற்குள் 2 ஆயிரம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பபடும் என அம்மாநில முதலமைச்சசர் ரங்கசாமி  உறுதியளித்துள்ளார்.  புதுவை மாநிலத்திற்குட்பட்ட மாகேவில் நடைபெற்ற கூட்டுறவு சங்க விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர்…

புதுச்சேரியில் 1 மாத காலத்திற்குள் 2 ஆயிரம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பபடும் என அம்மாநில முதலமைச்சசர் ரங்கசாமி  உறுதியளித்துள்ளார். 

புதுவை மாநிலத்திற்குட்பட்ட மாகேவில் நடைபெற்ற கூட்டுறவு சங்க விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ரங்கசாமி,  கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் இயங்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூட்டுறவுத்துறையின் தலைவர்கள் செயல்பட வேண்டும் என்றார்.

மாகே கூட்டுறவு சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார். கூட்டுறவு துறையில் இளைஞர்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்புகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். 1 மாத காலத்திற்குள் புதுச்சேரியில் உள்ள 2 ஆயிரம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பபடும் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.