#INDvsNZ டெஸ்ட் | பெங்களூரில் வெளுத்து வாங்கும் மழை… முதல்நாள் ஆட்டம் ரத்து!

இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இது…

இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் இரு அணிக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குவதாக இருந்தது.

இதற்கிடையே, போட்டி நடைபெறும் இடத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழை காரணமாக இந்தப் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இன்று காலை 9 மணிக்கு போட்டி தொடங்க இருந்த நிலையில், மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பாட்டது.

மழை நின்ற பிறகு ஆட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு மழை நிற்காததால் தற்போது இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை 2வது ஆட்டம் நடைபெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.