முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

இந்தியாவின் முதல் பெண் ராணுவ அதிகாரிக்கு சென்னையில் சிலை திறப்பு

இந்தியாவின் முதல் பெண் ராணுவ அதிகாரியான கேப்டன் லட்சுமிக்கு சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் சிலை திறக்கப்பட்டுள்ளது.

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் கடந்த 1991-ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி பெண்களுக்கும் பயிற்சி வழங்கும் மையம் தொடங்கப்பட்டது. இந்த பயிற்சி மையம் தொடங்கி இன்றோடு 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனை, கொண்டாடும் விதமாக இந்தியாவின் முதல் பெண் ராணுவ அதிகாரியான சென்னையை சேர்ந்த கேப்டன் லட்சுமிக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பயிற்சி பெரும் பெண் ராணுவ அதிகாரிகள் தங்கும் விடுதிக்கு கேப்டன் லட்சுமியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டை சென்னை ராணுவ பயிற்சி மையத்தின் லெப்டினண்ட் ஜெனரல் சஞ்சீவ் சௌகான் தலைமையில் கேப்டன் லட்சுமியின் பேரன் ஷாத் அலி திறந்துவைத்தார்.
இதுவரை இந்த மையத்தில் 2,835 பெண் ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெற்று இந்திய ராணுவத்தில் பணிபுரிந்துள்ளனர். இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“என் வெற்றியை விட மயிலாப்பூர் திமுக வேட்பாளர் வெற்றி முக்கியம்” – உதயநிதி

Gayathri Venkatesan

ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெறாத பிரமாண்ட படம்!

Web Editor

திருச்செந்தூரில் மீன்பிடி தொழிலாளி வெட்டி கொலை

G SaravanaKumar