அதிரடி காட்டிய மே.இ.தீ பேட்ஸ்மேன்கள்; இந்தியாவுக்கு 196 ரன்கள் இலக்கு….!

இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்றுப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்துள்ளது. 

டி 20 உலகக்கோப்பை தொடரான இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில்  இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகள் மோதுகின்றன.  இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்ய குமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷாய் ஹோப்பும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த சேஸ்-ஹோப் ஜோடி அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தது. சேஸ் 40 ரன்களும், ஹோப் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் அதிரடி காட்ட தொடங்கினர். இதனால அணியில் ஸ்கோர் கனிசமான அளவு உயர்ந்தது.

இந்திய அணி தரப்பில் பும்ரா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.