தங்கம், வெள்ளி விலை குறைவு ; இன்றைய நிலவரம் என்ன……..?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமையில் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் இருக்காது. ஆனால் ஈரான் மீதான தாக்குதலால் நேற்று தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருந்தது.

இதனால் நேற்று கிராமுக்கு ரூ.225-ம், சவரனுக்கு ரூ.1,800-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 775-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 15,660-க்கும், சவரனுக்கு ரூ.920 குறைந்து ஒரு சரவன் தங்கம் ரூ.1,25,280-க்கும் விற்பனையாகிறது.

அதே போல், சென்னையில் வெள்ளி கிராம் ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.315-க்கும், கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.3.15 லட்சத்துக்கும் விற்பனையாகிறது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.