நாட்டின் பொருளாதாரத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, இந்தியாவில் 20 கோடிக்கும் அதிகமானோர் நாளொன்றுக்கு 400 ரூபாய்க்கும் குறைவாகவே வருமானம் ஈட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1991-ல் தாராளமயமாதல், உலகமயமாதல், தனியார்மயமாதல் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார சீருதிருத்தங்கள் கொண்டு வரப்பட்டதன் விளைவாக, 30 கோடி இந்தியர்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டனர். கடந்த சில ஆண்டுகளாக உலகின் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில், இந்தியா முன்னணியில் இருந்த நிலையில், கொரோனா பேரிடர் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நடப்பு நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி இலக்கு எட்டப்படாத நிலையில், 20 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள், நாள்தோறும் 400 ரூபாய்க்கும் குறைவாகவே வருமானம் ஈட்டுவதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கையில், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், ஏழைகள், பணக்காரர்களுக்கு இடையேயான பொருளாதார ஏற்றத்தாழ்வு, இந்தியாவில் அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மிகப்பெரிய பொருளாதார சீர்த்திருத்தங்கள், அடிப்படை கட்டமைப்பில் மாற்றங்களை கொண்டு வந்தால் மட்டுமே, வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இயலும், எனவும் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.