பிரிட்டனின் கெய்ர்ன் நிறுவனம் மத்திய அரசின் 20 நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அனுமதி பெற்றுள்ளது.
பிரிட்டனின் கெய்ர்ன் நிறுவனத்தை எதிர்த்து இந்தியா தொடர்ந்திருந்த வரி நிலுவை வழக்கில் கெய்ர்ன் நிறுவனத்திற்கு ஆதரவாக தி பெர்மனென்ட் கோர்ட் ஆப் ஆர்பிட்ரேஷன் எனும் சர்வதேச தீர்ப்பாயம் தீர்பினை வழங்கியது. இதனையடுத்து 1.7 பில்லியன் டாலர் இழப்பீட்டு தொகை வழங்க இந்தியாவுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த இழப்பீட்டு தொகை செலுத்துவது குறித்து இந்தியா இதுவரை எந்த கருத்தையும் தெரிவி்க்காத நிலையில், தற்போது பிரான்ஸில் உள்ள இந்திய அரசுக்கு சொந்தமான 20 நிறுவனங்களின் சொத்துக்களை கைப்பற்றுவதற்கான ஒப்புதலை பிரான்ஸ் நீதிமன்றத்திடமிருந்து கெய்ர்ன் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
பிரான்ஸில் உள்ள இந்தியாவுக்கு சொந்தமான நிறுவனங்களின் சொத்து மதிப்பு 20 மில்லியன் யூரோவுக்கும் அதிகமாகும். முன்னதாக கடந்த ஜூன் 11ல் பிரான்ஸ் நீதிமன்றம் இந்தியாவுக்கு சொந்தமான நிறுவனங்களின் சொத்துக்களை முடக்க கெய்ர்ன் நிறுவனத்திற்கு அனுமதியளித்தது. இதனால் மத்திய அரசுக்கு சொந்தமான சொத்துகள் குறித்து அச்சம் மேலெழுந்துள்ளது.







