‘இந்தியன் 2’வை தொடர்ந்து ’இந்தியன் 3’? – வெளியான புதிய தகவல்.!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குநர் ஷங்கர் உடன் கமல்ஹாசன் இரண்டாம் முறையாக இணைந்த திரைப்படம் ‘இந்தியன் 2’.  1996ஆம் ஆண்டு வெளியான…

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குநர் ஷங்கர் உடன் கமல்ஹாசன் இரண்டாம் முறையாக இணைந்த திரைப்படம் ‘இந்தியன் 2’.  1996ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போட்டதுடன்,  வசூலையும் குவித்து தமிழ் சினிமாவின் பிரபல கமர்ஷியல் படமாக உருவெடுத்தது.  கமல்ஹாசன் இப்படத்துக்காக தேசிய விருது வென்றார்.

இப்படத்தின் இரண்டாம் பாக பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் முதல் பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாகவும் பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடனும் படம் வெளியாக உள்ளது. இந்தியன் 2 படத்தின் இண்ட்ரோ வீடியோ நேற்று வெளியானது. தமிழில் நடிகர் ரஜினிகாந்த், மலையாளத்தில் மோகன் லால், தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமெளலி, கன்னடத்தில் கிச்சா சுதீப், ஹிந்தியில் அமீர் கான் ஆகியோர் இந்த வீடியோவை வெளியிட்டனர்.

இந்நிலையில், ‘இந்தியன் 2’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ‘இந்தியன் 2’ படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரலிலும், ‘இந்தியன் 3’ படத்தை அடுத்த தீபாவளி பண்டிகைக்கும் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் படக்குழு இதுகுறித்து அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. ‘பாகுபலி’ பாணியில் க்ளைமாக்ஸ் காட்சியில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க படக்குழு விரும்புவதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.