உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களத்தில் இறங்கினர்.
ஹெட் 11 ரன்னிலும், வார்னர் 15 ரன்னலும் ஆட்டமிழந்து வெளியேற அடுத்து வந்த ஸ்மித் 44 ரன்களும், லபுஸ்சேன் 71 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார்கள்.
இறுதியாக ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் எடுத்துள்ளது. கேமரூன் கிரீன் தன் பங்கிற்கு 47 ரன்களும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 35 ரன்களும் எடுத்தனர். 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 286 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர். இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி ஒரேயொரு மேட்ச்சில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.







