முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

இந்தியாவில் புதிதாக 21,257 பேருக்கு கொரோனா தொற்று

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 21,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வேகமாக பரவிய கொரோனா 2வது அலை தற்போது குறைந்து வருகிறது. தடுப்பூசி செலுத் தும் பணி நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருவதும் தொற்றுப் பாதிப்பு குறை வதற்கு காரணமாக இருக்கிறது. தற்போது 3வது அலை வந்தால் அதனை எதிர் கொள்வதற் கான முன்னேற்பாடுகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன் 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று, இப்போது ஏற்ற இறக்கமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 21,257 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட அதிகம்.

தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில், 24,963 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள் ளனர். இதுவரை 3,32,25,221 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 2,40,221 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே நாளில் 271 பேர் கொரோனா வுக்கு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,127 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு

Saravana Kumar

டெல்லியில் பயங்கர தீ விபத்து

Saravana Kumar

பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட இரட்டையர்கள்!

Ezhilarasan