இந்தியாவில் கடந்த 6 மாதத்தில் முதன் முறையாக 20 ஆயிரத்துக்கு கீழ் கொரோனா தொற்று குறைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் சில நாட்களாக தொற்று குறைந்து வருகிறது. நேற்று 26,041 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 18,795 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 6 மாதத்தில் 20 ஆயிரத்துக்கும் கீழாக தொற்று குறைந்திருப்பது இதுதான் முதன் முறை ஆகும். இதையடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை3,36,97,581 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்புகு ஒரே நாளில் 179 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,47,373 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 26,030 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள் ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32,9,58,002 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 2,92,206 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 87,07,08,636 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,02,22,525 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.







