பாஜகவிடம் ரங்கசாமி சரணாகதி அடைந்துவிட்டார் : நாராயணசாமி விமர்சனம்

முதலமைச்சர் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள பாஜகவிடம் ரங்கசாமி சரணா கதி அடைந்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைத்து ஐந்து மாதங்கள்…

முதலமைச்சர் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள பாஜகவிடம் ரங்கசாமி சரணா கதி அடைந்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைத்து ஐந்து மாதங்கள் ஆன நிலையில், மக்களுக்கு எந்த விதப் பலனும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மாநிலத்திற்குத் தேவையான நிதியை மத்திய அரசாங்கத்திடமிருந்து பெறமுடியாத நிலையில், அலங்கோலமான ஆட்சியை முதலமைச்சர் ரங்கசாமி நடத்தி வருகிறார் என சாடியுள்ளார். எது நடந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில், தனது முதலமைச்சர் நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள பாஜகவிடம் ரங்கசாமி சரணாகதி அடைந்துள்ள தாக அவர் விமர்சித்தார்.

மேலும், உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைப்படி பாரபட்சமின்றி நடத்த அதிகாரிகள் நடவடிக் கை எடுக்க வேண்டும் என நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.