இந்தியா – நேபாளம் இடையிலான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் – பிரதமர் மோடி உறுதி!!

இந்தியா-நேபாளம் இடையே உள்ள எல்லை பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசன்டா (Pushpa Kamal Dahal Prachanda) 4 நாட்கள் அரசு…

இந்தியா-நேபாளம் இடையே உள்ள எல்லை பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசன்டா (Pushpa Kamal Dahal Prachanda) 4 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்த அவர், பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகள் பற்றி விவாதித்தார்.

தொடர்ந்து, இரு நாட்டு பிரதமர்களும் இணைந்து, உத்தரப் பிரதேசத்தின் ரூபைதிகா மற்றும் நேபாளத்தின் நேபாள்கன்ஜ் இடையே, சர்வதேச எல்லையில் சரக்கு மற்றும் பயணிகள் வாகன வசதிக்காக ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகளை காணொலி மூலம் திறந்து வைத்தனர். அதேபோல், பீகாரின் பத்னாகா மற்றும் நேபாளம் இடையே சரக்கு ரயில் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தனர்.

இதையும் படியுங்கள் : கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார் டிஜிபி!!

பின்னர் பேசிய பிரதமர் மோடி, இந்தியா-நேபாளம் இடையே போக்குவரத்து ஒப்பந்தங்களும், நீண்டகால மின் வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தானதாக கூறினார். இரு நாடுகளின் உறவுகளை இமாலய உச்சிக்கு கொண்டு செல்ல இருதரப்பு அரசுகளும் பாடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.