இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று 7 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமிக்ரான் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 23 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா பாதிப்பில் இருந்து 10,004 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,40,79,612 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு 95,014 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில், தொற்றால் பாதிக்கப்பட்ட 220 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் 128.76 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.








