GOLD RATE | தங்கம் விலை சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.180 குறைந்துள்ளது.

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. காட்ந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. அதன்படி நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,220-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,760-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்து உள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.180 குறைந்து ரூ.14,040-க்கும், சவரனுக்கு ரூ.1,440 குறைந்து ரூ.1,12,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் குறைந்து காணப்படுகிறது. அதன்படி, சென்னையில் வெள்ளி ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.5000 குறைந்து ரூ. ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.