“பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணியில் உள்ளது!” – அமைச்சர் நிர்மல்குமார்

பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணியில் உள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஆப்போது அவர் கூறியதாவது, “”பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணியில் உள்ளது. அரசியலில் நிரந்தர எதிரி இல்லை என கனிமொழி சோமு, வானதி சீனிவாசன் கூறியுள்ளனர். திருச்சி சிவா மத்திய அமைச்சர் ஆவார் என கூறப்பட்டதை திமுக தரப்பில் இருந்து யாரும் மறுக்கவில்லை. டெல்லியில் யாருடன் பேசினாலும் மக்கள் நலனுக்காக இருக்கும் என மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். நாடாளுமன்றத்தில் இருக்கை மாற்றம் வேண்டும் என்பது குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டியது தானே, ஏன் தேநீர் விருந்து நடைபெறும் பொழுது டெல்லிக்கு செல்ல வேண்டும்?. தொகுதி மறுவறைக்கு எதிராக வாக்களிப்போம் என திமுக கூறவில்லை. டெல்லியில் அடிமையாக திமுக உள்ளது.

டாஸ்மார்க் ஊழல் போன்ற அனைத்துக்கும் ஆதாரங்கள் உள்ளது அதன் அடிப்படையில் தான் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. PARTY FUND அனைத்தும் அரசு பணமாக மாறி வருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது.

முதலீட்டாளர் மாநாடுகள் கடந்த ஆண்டுகளில் பல்வேறு விதமாக நடைபெற்றது. கடந்த ஆட்சியாளர்கள் தங்களுடைய வீட்டிற்கு முதலீடுகள் கொடுத்தால் மட்டுமே இது போன்ற மாநாடு நடைபெறும். திமுக அரசு முடிந்த பிறகு அனைத்து முதலீட்டாளர்களும் முறையாக தொழில் நிறுவனங்களை தொடங்கி வருகின்றனர்.

கடந்த ஐந்து வருடங்களாக போதைப்பொருள் பழக்கம் தமிழகத்தில் முழுவதும் பரவி உள்ளது. கோவையில் மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு கல்லூரி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள தகராறு காரணத்தினால் மாணவர் தாக்கப்பட்டுள்ளார். கோவை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக அவர்களை காப்பாற்றிக் கொள்ள எது வேண்டுமானாலும் செய்வார்கள். அதிமுக அவருடைய கட்சி பிரச்சினைகளை முதலில் தீர்த்து வைக்க வேண்டும், பிறகு தமிழகத்தில் போராட்டம் நடத்தலாம். எடப்பாடியுடன் யார் யார் நிற்கிறார்கள், எத்தனை நபர்கள் உள்ளார்கள் என்பது குறித்து பார்ப்பதற்காக இந்த போராட்டம் நடைபெறுகிறது|” இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.