முக்கியச் செய்திகள் கொரோனா

கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 45,951 பேருக்கு புதிதாக பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 45,951 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவை ஆட்டிப் படைத்து வந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அதுபோலவே, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 45,951 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரையிலான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,03,62,848 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை நாட்டில், 41,01,00,044 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது ஒரே நாளில் 60,729 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 2,94,27,330 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது, 5,36,064 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

48வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 817 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,98,454 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில்  36,51,983. தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன  இதுவரை மொத்தம் 33,28,54,527 தடுப்பூசிகள்  போடப்பட்டுள்ளன. நோய்த் தொற்று விகிதம்  2.34 %, இறப்பு விகிதம் 1.31 சதவிகிதமாகவும், குணமடைவோர்  விகிதம் 96.92 சதவிகிதமாகவும் உள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழப்பு!

Jeba Arul Robinson

இந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர் நிதியுதவி; கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு

Ezhilarasan

நேற்று ஒரே நாளில் 165 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!

Vandhana