முக்கியச் செய்திகள் இந்தியா

தமிழகத்தில் கொரோனா 2வது அலையில் 51 மருத்துவர்கள் உயிரிழப்பு!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,03,62,848 ஆக அதிகரித்துள்ள நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலையில் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கையை இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் அறிக்கையின் படி இதுவரை நாடு முழுவதும் 798 மருத்துவர்கள் கொரோனா இரண்டாவது அலைக்கு எதிரான போரில் தங்கள் உயிரை இழந்துள்ளனர். அதிகபட்சமாக டெல்லியில் 128 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது இடத்தில் பீகார் உள்ளது. இம்மாநிலத்தில் 115 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தென்னிந்தியாவை பொறுத்த அளவில், தமிழகத்தில் 51 மருத்துவர்களும், கேரளாவில் 24 மருத்துவர்களும், கர்நாடகாவில் 9 மருத்துவர்களும், ஆந்திராவில் 40 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர். தென்னிந்திய மாநிலங்களில் தமிழகத்தில்தான் அதிக அளவில் மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 3,98,454 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை: சபாநாயகர் அப்பாவு

Gayathri Venkatesan

கோவில்பட்டி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் – அமைச்சர் கடம்பூர் ராஜூ

Gayathri Venkatesan

போலி மதுபானத்தை அருந்திய 3 பேர் பலி!