நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்!

நாடு முழுவதும் இதுவரை 11 கோடியே 70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்…

நாடு முழுவதும் இதுவரை 11 கோடியே 70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 26 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும், 5 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் நாடு முழுவதும் 67 ஆயிரத்து 400 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், 45 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அரசு வலியுறுத்தி உள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏப்ரல் 14 முதல் 16ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 666 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். ஜனவரி 16 தேதி முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் முதல் முறையாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் தடுப்பூசி போட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 43 லட்சத்து 90 ஆயிரத்து 629 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.