இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே யுபிஐ பணப்பரிமாற்றம் செய்யும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டம் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் முன்னிலையில் தொடங்கிவைக்கப்பட்டது.
டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறை (யுபிஐ) மற்றும் சிங்கப்பூரின் பேநௌ ஆகிய தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் வாழும் சிங்கப்பூர் மக்கள் பணப்பரிவர்த்தனையை எளிதாக மேற்கொள்ளமுடியும்.
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “டிஜிட்டல் இந்தியா திட்டம் மக்களின் வாழ்க்கையையும் வர்த்தகத்தையும் எளிதாக்கியுள்ளது. தொழில்நுட்பமும், பின்டெக் துறையும் இன்று உலகை இணைத்து வருகிறது. கொரோனா காலத்தில் இந்தியாவின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு உதவிகரமாக இருந்தது. இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது இரு நாட்டு குடிமக்களுக்கு கிடைத்த பரிசு. குறிப்பாக புலம் பெயந்த தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும அவர்களது குடும்பங்களுக்கு பயனளிக்கும்” என்று தெரிவித்தார்.
அண்மைச் செய்தி:எதிர்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜகவை நிச்சயமாக தோற்கடிக்க முடியும்- ராகுல் காந்தி
பேநெள சிங்கப்பூரில் மிக வேகமாக இயங்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை தளமாக உள்ளது. யுபிஐ உடன் பேநெள இணைக்கப்பதால் வெளிநாட்டு வங்கி கணக்குக்கு பணம் அனுப்பும் போது நேரிடும் கூடுதல் செலவு தவிர்க்கப்படும். குறைந்த கட்டணத்தில் எந்த நேரத்தில் பணம் அனுப்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.







