இந்தியாவை சேர்ந்த இளைஞருக்கும், பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் ஆனதை வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர்.
நட்புக்கும், காதலுக்கும் எல்லையே கிடையாது. கண்டம் விட்டு கண்டம், கடல் தாண்டி இணைந்த உறவுகள் ஏராளம். அப்படி சமீபத்தில் இணைந்த ஒரு காதல் ஜோடி தான் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றனர். இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஆணுக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த இனிய தருணத்தை அவர்கள் சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இருவரும் பரஸ்பரம் மோதிரம் மாற்றி, கேக் வெட்டியுள்ளனர். அந்த கேக்கில் இடம்பெற்றிருந்த வாசகம் தான் ஹைலைட். #ProjectMilaapBegins என்று கேக்கில் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து நிச்சயதார்த்தமான பெண்ணின் சகோதரி மிஷல் என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “என் சகோதரி இந்தியாவைச் சேர்ந்த தன் காதலனுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார். அறையில் உள்ள யானையிடம் எப்படியாவது பேசியாக வேண்டுமல்லவா?” என்று குறிப்பிட்டு அந்த கேக்கின் படத்தையும் பகிர்ந்துள்ளார்.
my sister just got engaged to her indian boyfriend so you know we had to address the elephant in the room somehow pic.twitter.com/U25RxcJhco
— Mishal (@mishalengelo) February 19, 2023
அதில்தான் அந்த #ProjectMilaapBegins வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த ட்வீட் பல ஆயிரக்கணக்கான மக்களிடம் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது. ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு ‘Main Hoon Na’ படம் வெளியானது. அதில் இந்தியா – பாகிஸ்தான் நட்புணர்வை ஊக்குவிப்பதற்காக ProjectMilaap என்ற திட்டத்தை பயன்படுத்தியிருப்பார்கள். அதே விஷயத்தை, காதல் மூலம் இருநாட்டுக்கு இடையே நட்புணர்வை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட இந்தத் தம்பதிக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
-ம.பவித்ரா