மெட்ரோ பணிகளால் சென்னையின் முக்கிய பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்துச் சிக்கல்கள் குறித்தும், அப்பகுதி பொதுமக்கள் வைக்கும் கோரிக்கைகளை குறித்தும் விரிவாகப் பார்க்கலாம்.
சென்னை, மதுரை, திருப்பூர் மற்றும் ஓசூரில் மழைநீர் வடிகால் பணிகளால், நாள்தோறும் மக்கள் சந்திக்கும் இன்னல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற நியூஸ் 7 தமிழ், தற்போது மீண்டும் சென்னையில் இன்று களமிறங்கியுள்ளது.
மெட்ரோ ரயில் பணிகளால் சென்னைவாசிகள் சந்திக்கும் இன்னல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், “நெரிசலில் நெளியும் சென்னை” என்ற தலைப்பில் இன்று ஒருநாள் முழுவதும் பிரமாண்ட களஆய்வை நடத்தி வருகிறது.
இதையும் படியுங்கள் : நியூஸ்7 தமிழின் ’நெரிசலில் நெளியும் சென்னை’ களஆய்வு எதிரொலி – மெட்ரோ 2ம் கட்ட திட்ட இயக்குனர் அர்ஜுனன் விளக்கம்
அந்த வகையில், சென்னை ஓஎம்ஆர் சாலையில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகளால், துரைப்பாக்கம், சிறுசேரி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. எனவே விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு, மெட்ரோ பணிகளை முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல், மாதவரம் மெட்ரோ ரயில் பணிகளால், ரெட்டேரி, திருமங்கலம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். காலை நேரங்களில் 10 நிமிடத்தில் செல்லும் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, 25 நிமிடங்கள் ஆவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலால் உடல் உபாதைகள் ஏற்படுவதாக தெரிவிக்கும் மக்கள், விரைந்து மெட்ரோ பணிகளை முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.
மெட்ரோ பணிகளால் திருமங்கலம் பகுதியில் ஏற்படும் சிக்கல்களை வீடியோவாகக் காண :
சென்னை மேடவாக்கம் – பெரும்பாக்கம் சாலையின் நடுவே மின்கம்பத்தை அகற்றாமல் மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் விபத்து அடிக்கடி ஏற்படுவதாக மேடவாக்கம் பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே மின்கம்பத்தை அகற்றி, சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.
முறையான திட்டமிடலின்றி நடைபெறும் மெட்ரோ பணிகளால், பெரும்பாக்கம் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 3-4 கி.மீ தூரத்தை கடக்கவே 30 நிமிடங்கள் ஆவதாக குற்றச்சாட்டை முன்வைக்கும் பொதுமக்கள், முறையான திட்டமிடலோடு, போக்குவரத்து நெரிசலை கண்காணித்து சீர்ப்படுத்த காவலர்களை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
பெரும்பாக்கம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்துச் சிக்கல்கள் குறித்த முழுமையான தகவல்களை வீடியோவாகக் காண :
கோடம்பாக்கம் பகுதியில், மெட்ரோ ரயில் பணிகளால் பல முக்கிய சாலைகள் ஒருவழி சாலைகளாக மாற்றம் செய்யப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் கடும் அவதியுறுகின்றனர். 2 கி.மீ தூரம் செல்ல 45 நிமிடங்கள் ஆவதாகவும், மாற்று ஏற்பாடு இல்லாமல் போக்குவரத்து மாற்றப்பட்டதாகவும் குற்றம்சாட்டும் பொதுமக்கள், விரைந்து மெட்ரோ பணிகளை முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
கோடம்பாக்கம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்துச் சிக்கல்கள் குறித்த முழுமையான தகவல்களை வீடியோவாகக் காண :









