சமூகவலைதளத்தில் வீடியோ பதிவு செய்து லைக் பெறுவதற்காக அரசு பேருந்தை மறித்து அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே இன்ஸ்டாகிராம், பேஸ்புக், whatsapp உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் மற்றவர்களிடம் லைக் பெறுவதற்காக இளைஞர்கள் பல்வேறு நிகழ்வுகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் நேற்று இளைஞர் ஒருவர் அரசு பேருந்தை மறித்து இருசக்கர வாகனத்தில் அமர்ந்து பொதுமக்களுக்கு இடையூறாகவும், அச்சுறுத்தும் வகையிலும் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் வாகனத்தில் இருந்து புகையை வெளியேற்றி வாகன ஓட்டிகளை அவதிப்பட வைத்த இவர் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா







