நடிகர் விஷ்ணு விஷாலுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து லால் சலாம் படக்குழுவின் சார்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போஸ்டர் ஒன்றை ட்விட் செய்துள்ளார்.
2009-ல் கபடி விளையாட்டை மையமாகக் கொணடு வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் விஷ்ணு விஷால். யதார்த்தத்தையும் கிராமத்து வாழ்வியலையும் கபடி விளையாட்டுடன் கலந்து தரமான திரைப்படைப்பாக மிளிர்ந்தது அந்தப் படம். அந்தப் படத்தில் எளிமையும் அப்பாவித்தனமும் மிக்க கிராமத்து இளைஞனாக முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் விஷ்ணு விஷால்.
அதன் பின்னர் ஜனரஞ்சங்கமான திரைப்படங்களில் நடிப்பதிலேயே கவனம் செலுத்தினார். இவரது திரைப்படங்களில் ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், நீர்ப்பறவை, இன்று நேற்று நாளை, முண்டாசுபட்டி, ராட்சசன், குள்ளநரிகூட்டம் மக்களின் ஆல் டைம் ஃபேவரட் திரைப்படங்களாக அமைந்தது. கடைசியாக இவரது நடிப்பில் கட்டா குஸ்தி திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.
தற்போது விஷ்ணு விஷால் இன்று நேற்று நாளை – 2, மோகன்தாஸ், லால் சலாம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ராட்ச்சன் புகழ் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் ஒருபடம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு திரைப்பிரலங்கள் பலரும் வாழ்த்து கூறி வரும் நிலையில் லால் சலாம் படக்குழுவின் சார்பில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் விஷ்ணு விஷால் அதனை ரீட்விட் செய்துள்ளார்.







