சிமெண்ட் விலை உயர்வை கண்டித்து கட்டுமானம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்!

சிமெண்ட் விலை உயர்வை கண்டித்து கட்டுமானம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் சிமெண்ட் மூட்டைகளை அடுக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை போட் கிளப் பகுதியில் இருக்கக்கூடிய இந்திய சிமெண்ட் ஸ்ரீனிவாசன் இல்லத்தின் முன்பு கட்டுமானம்…

சிமெண்ட் விலை உயர்வை கண்டித்து கட்டுமானம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் சிமெண்ட் மூட்டைகளை அடுக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை போட் கிளப் பகுதியில் இருக்கக்கூடிய இந்திய சிமெண்ட் ஸ்ரீனிவாசன் இல்லத்தின் முன்பு கட்டுமானம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் 10பேர் சிறிய வேனில் சிமெண்ட் மூட்டைகளை அடுக்கி மற்ற மாநிலங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையையும், தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையையும் குறிப்பிட்டு பதாகைகளில் ஏந்திய படி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பேட்டியளித்த அவர்கள், தமிழகத்தின் அருகில் இருக்கக்கூடிய மாநிலங்களில் சிமெண்ட் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் போது தமிழகத்தில் மட்டும் 500 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் 100 ரூபாய் உயர்த்திய போதே விலையை குறைக்க கோரிக்கை வைத்தாதாகவும், தற்போது எந்த வித தட்டுபாடும் இல்லாமல் இருக்கும்போது மேலும் விலை உயர்த்தியிருக்கின்றனர்.

விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்ணும் என இந்த ஆர்பாட்டம் நடைபெறுவதாக தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.