முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது!

நடிகை சாந்தின் அளித்த பாலியல் புகார் வழக்கில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை சாந்தினி, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்திருத்தார். புகாரில், தன்னை திருமணம் செய்து…

நடிகை சாந்தின் அளித்த பாலியல் புகார் வழக்கில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகை சாந்தினி, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்திருத்தார். புகாரில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி மணிகண்டன் ஏமாற்றியதாகவும், மேலும் தன்னை கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

புகாரை அடுத்து தலைமறைவாகிய மணிகண்டனை கைது செய்ய இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வரப்பட்டது. இதற்கிடையே, இந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யதது.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை இன்று பெங்களூருவில் உள்ள பனஹனஹள்ளியில் வைத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மணிகண்டனின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர்களையும் தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.