விவசாயிகள் இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 26வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி மாநில எல்லைகளில், கடும் குளிரிலும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், அமைதி பேரணி, உண்ணாவிரதம் என பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் ஏராளமானோர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ளவிருப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். விவசாயிகள் சுழற்சி முறையில் இந்த போராட்டத்தில் ஈடுபடவிருக்கின்றனர். அதாவது தினமும் 11 விவசாயிகள் 24 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.







