“பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும்” – கடம்பூர் ராஜூ

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்றைய நிலவரப்படி…

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் ரூ.92.90க்கும், டீசல் ரூ.86.31க்கும் விற்பனையாகிறது. இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமிர்தம் தாய்ப்பால் சேகரிப்பு மையத்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பெட்ரோல் டீசல் விலையை குறைக்க தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது எனவும், விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு, மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.