தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 35 ஆயிரத்து 873 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் முப்பதாயிரத்தைக் கடந்த இந்த தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், ஒரே நாளில், 35 ஆயிரத்து 873 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு, 36,184 ஆக இருந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் இதுவரை 18 லட்சத்து 06 ஆயிரத்து 861 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது, 2 லட்சத்து 84 ஆயிரத்து 278 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 25 ஆயிரத்து 776 பேர் குணமடைந்து ஒரே நாளில் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 15 லட்சத்து 02 ஆயிரத்து 537 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக, ஒரே நாளில் 448 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை, 20 ஆயிரத்து 046 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 5559 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 86 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளனர். 4871 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். செங்கல்பட்டில் 2155 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 1040 பேருக்கும் திருவள்ளூரில் 1487 பேருக்கும் திருச்சியில் 1232 பேருக்கும் கோவையில் 2377 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.







