சட்டப் பேரவை நிகழ்வுகளில் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் -புதுச்சேரி சபாநாயகர் செல்வம்!

புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகள் நடக்கும் போது தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து செயலர்கள் மற்றும் துறை இயக்குநர்கள் பேரவை வளாகத்தில் இருக்க வேண்டுமென சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் உள்ள அரசு உயர் அதிகாரிகள்,…

புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகள் நடக்கும் போது தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து செயலர்கள் மற்றும் துறை இயக்குநர்கள் பேரவை வளாகத்தில் இருக்க வேண்டுமென சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் உள்ள அரசு உயர் அதிகாரிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்றும் ஒத்துழைப்பு
வழங்கப்படவில்லை எனக் கூறி வந்தனர். மேலும் சட்டப்பேரவை கூடும்போது தலைமைச்
செயலாளர் உள்ளிட்ட அரசுத்துறை செயலர்கள் மற்றும் இயக்குநர்கள் பேரவை
வளாகத்திலோ அல்லது அமைச்சர்களின் அறையிலே அமர்ந்து
அமைச்சர்களிடம் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது
அதிகாரிகளுடைய கடமை.

ஆனால் சமீப காலமாக அதிகாரிகள் அதை சரியாக கடைபிடிக்கவில்லை என்பது குறித்து தொடர்ந்து புகார் எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் புதுச்சேரி பேரவை கூட்டத்திற்கு அனைத்து அதிகாரிகளும் வரவேண்டும் என சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டார். 

—-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.