நெல்லை மாவட்டம், கூடுதாழை பகுதியை சார்ந்த மீனவர்கள் தொடர்ந்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் உவரியை அடுத்த கூடுதாழை பகுதியை சேர்ந்த மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடற்கரை கிராமத்தில் அலையின் வேகத்தால் கடல் அரிப்பு ஏற்படுவதாகவும், இதனால் படகுகள் நிறுத்துவதற்கு கூட இடமில்லாமல் போவதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் இப் பாதிப்பினால் தொழில் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர். இந் நிலையில் கடந்த மூன்று நாட்களாக மீனவர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் நான்காவது நாளான கடலுக்கு செல்லாமல் ஆண்கள் மற்றும் பெண்கள் என 250க்கு மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
—கோ. சிவசங்கரன்







