அடுத்த 2 நாட்களில் 13 லட்சம் தடுப்பூசிகள்!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் மத்திய அரசிடமிருந்து, 13 லட்சம் தடுப்பூசிகள் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த மே…

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் மத்திய அரசிடமிருந்து, 13 லட்சம் தடுப்பூசிகள் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக, 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்குள், தமிழகத்திற்கு 11.4 லட்சம் கோவிஷீல்டு மற்றும் 1.6 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் வர உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த தடுப்பூசிகள் வந்த பிறகு, 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.