ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமெர்ஷியல் ஃபர்மூலாக்களில் சிக்கிக்கொள்ளாமல், வழக்கமான நேர்காணல் பாணியிலேயே ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்த பெருமை எல்லேன் டிஜெனிரெஸ்யே சேரும்.
அமெரிக்காவில் பிறந்த இவர். 1997 ஆம் ஆண்டு தான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை கண்டறிந்து, அதை வெளிப்படுத்திக்கொண்டார். அன்று முதல் இவர் எல்ஜிபிடிகியூ சமூகத்திற்காகக் குரல் கொடுத்து வருகிறார். ( LGBTQ ) இவர் போர்ஷுயா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். 63 வயதாகும் இவர் ஒரு எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும், நகைச்சுவை நடிகராகவும் இருக்கிறார். இவர் நடத்தும் நேர்காணல் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இவர் நிகழ்ச்சியைக் கையாளும் விதம் வித்தியாசமானது. எந்த கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது என்று நாம் யோசிப்போமோ, அந்த கேள்விகளை இயல்பாகக் கேட்பார். இந்த நேர்காணலுக்கு வரும் ஆளுமைகள், இவரைக் கண்டு சற்று பயம் கொள்வது வழக்கம். அதிகம் பிரபலமானவர் என்பதற்காக யாருக்கும் தனி மரியாதையை அவர் வழங்கமாட்டார். இதுபோன்று இவர் சமரசங்கள் இன்றி நிகழ்ச்சியை நடத்துவதே, பலராலும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

இன்று நம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காணும் நேர்காணலுக்கு இவர்தான் முதல் விதையிட்டவர் என்றே கூறலாம்.
இந்நிலையில் இவர் நடத்தி வந்த நேர்காணல் நிகழ்ச்சி, நிறைவடைய உள்ளது. 19 சீசன்களில் ,314 எப்பிசோடுகளை இவர் செய்துள்ளார். தனது நிகழ்ச்சி நிறைவடைவது தொடர்பாக அவர் இஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், ‘ பல நாட்களாக நிகழ்ச்சியை நிறைவு செய்வது தொடர்பாக யோசித்திருக்கிறேன். இப்போது அதற்கு நேரம் வந்துவிட்டது. இந்த நிகழ்ச்சி 19வது சீசனில் நிறைவடைகிறது. எண் 19 எனக்குப் பிடிக்கும். அரசியல் அமைப்பின் 19வது சட்டம்தான் பெண்களுக்கு ஓட்டுரிமையை வழங்கியது. அதனால் எனக்கு 19 எண் பிடிக்கும். எனக்குப் பேசி பேசி சலித்துவிட்டது’ என்று அவர் கூறியுள்ளார்.







