முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,95,041 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.56 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொற்று பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 2,023 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,82,553 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை 13.01 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1.32 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவுக்கு 21,57,538 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

பெண் யானை உயிரிழப்பு!

பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா உறுதி

Saravana Kumar

கொரோனா காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து!

Saravana