அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை!

வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ள வேண்டிய கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார். கடந்த 6ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற…

வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ள வேண்டிய கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கடந்த 6ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்படவுள்ளன. இதற்காக 75 வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா இரண்டவாது அலை வேகமாக பரவி வருவதால், வாக்கு எண்ணிக்கையின்போது என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், வாக்கு எண்ணும் மையங்களுக்குச் செல்லும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் என்னென்ன பாதுகாப்புடன் வரவேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.