மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜிக்கு சாவல் விடுத்து திரிணாமூல் காங்கிரசின் முன்னாள் அமைச்சர் நந்திகிராமில் களமிறங்கியுள்ளார். அவரின் சவாலை ஏற்று மமதாவும் அதே தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதனால், அம்மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
மேற்கு வங்கத்தின் 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் மார்ச் 27 தொடங்கி 8 கட்டங்களாக ஏப்ரல் 29 வரை நடைபெறுகின்றது. இந்நிலையில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும், பாஜக தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த பட்டியலில், சமீபத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த, திரிணமூல் மாநிலத்தின் அமைச்சர் , முதல்வர் மமதா பானர்ஜிக்கு நந்திகிராம் தொகுதியில் போட்டியிட சவால் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மமதா நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இதனால் மேற்கு வங்க தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.